Social Icons

Pages

Friday, October 11, 2013

மல்லி, புதினா, வெஜிடபிள் சாதம்!


 தேவையானவை:
 
பாஸ்மதி அரிசி/பச்சரிசி..1/2 கிலோ 
பெல்லாரி..............................2
காரட்.....................................2
முட்டைகோஸ்..................100 கிராம்
பீன்ஸ் .................................100 கிராம்
மல்லி தழை......................100 கிராம்
புதினா................................50 கிராம்.
பூண்டு, ..............................5
இஞ்சி ...............................சின்ன துண்டு
பட்டை, ............................மிகக் கொஞ்சமாக 
கிராம்பு............................ 2
மிளகுப் பொடி..................3 தேக்கரண்டி 
எண்ணெய்........................100 மில்லி 
உப்பு ..................................போதுமான அளவு.
 
செய்முறை:
 
அரிசியை கல் நீக்கி கழுவி, கொஞ்சம் உப்பு போட்டு, அரிசிக்கு இரு மடங்கு நீர் உற்றி, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். உடனே, திறந்து சாதம் ஒட்டாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். காரட், முட்டைகோஸ், பீன்ஸை கொஞ்சம் பெரிதாகவே நறுக்கவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் பெரிதாக நறுக்கவும். மல்லி+புதினாவை வெறுமனே அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டையும் தட்டி வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை கிராம்பு போட்டு சிவந்ததும் அதிலே வெங்காயம்+உப்பு கொஞ்சம் போட்டு நன்கு சிவந்ததும், நறுக்கிய காய்கறிகள்+தட்டிய இஞ்சி பூண்டு போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும். பின்னர் லேசான தீயில் இதனை எடுத்து குக்கரில் இருக்கும் சாதத்தில் போட்டு அதிலேயே அரைத்த மல்லி புதினா + மிளகுப் பொடியைப் போட்டு நன்கு கிளறி விடவும் பிறகு இறக்கி சாப்பிடவு

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.