Social Icons

Pages

Friday, October 11, 2013

புதினா, மல்லி, சிக்கன் கிரேவி


 தேவையானவை:
 
chicken gravy 380சிக்கன்.1 /2 கிலோ
சின்ன வெங்காயம்...100 கிராம் 
இஞ்சி...............1 இன்ச் நீளம்
பூண்டு................15 பல்
மிளகாய் பொடி ...1 தேக்கரண்டி
மல்லி பொடி.......1 தேக்கரண்டி
சீரகப்பொடி.........1 தேக்கரண்டி 
மிளகுப் பொடி......2 தேக்கரண்டி
மஞ்சள்  பொடி.........கொஞ்சம் 
பச்சை மிளகாய்......3 
புதினா தழை .....கைப்பிடி அளவு
மல்லி தழை .........கைப்பிடி
கறிவேப்பிலை....2 கொத்து
தயிர்................2 தேக்கரண்டி 
எலுமிச்சை.....1 /2 மூடி 
எண்ணெய்......4  தேக்கரண்டி 
உப்பு..தேவையான அளவு
 
செய்முறை:
 
சிக்கனை நன்கு கழுவவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலையை நன்றாக அரைக்கவும்.
 
ஓர் அகன்ற பாத்திரத்தில், சிக்கன், இஞ்சி,பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலை, மிளகாய், மல்லி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மிளகு பொடி, தயிர், எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், உப்பு போட்டு பிசைந்து, குளிர் பதனப் பெட்டியில், குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால் சிக்கன் அட்டகாசமாய் இருக்கும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கியதும், அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் போட்டு 5 நிமிடம் ஆனதும், தீயை சிம்மில் வைத்து விடவும். 10 நிமிடத்தில் சிக்கன் பஞ்சு மாதிரி வெந்து விடும். இறக்கி விடலாம்.கோழிக் கறி என்பதால், இதில் எண்ணெய் மிதக்கும். அதாங்க, அதன் கொழுப்பு..!
 
இந்த புதினா மல்லி சிக்கனை எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். இட்லி, தோசை சப்பாத்திக்கு நல்ல துணை..!

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.