Social Icons

Pages

Friday, October 11, 2013

டூயட் ஆஃப் மேங்கோ ரசமலாய்


என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 2,
சர்க்கரை - 100 கிராம்,
மாம்பழ விழுது - 100 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
பொடித்த பிஸ்தா - சிறிது.

எப்படிச் செய்வது?

பால் கொதிக்கும் போது, எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும். பால் திரிவதை மஸ்லின் துணியில் கட்டி வைத்தால்,  தண்ணீர் வடியும்.  உள்ளே உள்ள பனீரை கைகளால் நன்கு மசித்து, மிருதுவாக்கி, இதய வடிவத் துண்டுகளாக வெட்டி வைக்கவும். மாம்பழத்தை தோல் நீக்கி,
கூழாக  அரைத்து வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் விட்டு, ஒரு கம்பிப் பதத்துக்கு பாகு வைக்கவும்.  அந்தப் பாகில் சிறிதளவை எடுத்து ஆற வைக்கவும்.  சர்க்கரைப்பாகு ஓரளவு கொதிக்கும் போதே, அதில் தயாராக உள்ள இதய வடி வத் துண்டுகளைச் சேர்க்கவும்.

அவை மேலே மிதந்து வரும் போது எடுத்து, ஆற வைத்துள்ள பாகில் போடவும். கன்டென்ஸ்டு மில்க்கில் ஏலக்காய் தூளும், தேவை யானால் சிறிது  சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
மாம்பழக்கூழ் சேர்த்து இறக்கவும். சர்க்கரைப்பாகில் ஊறிக் கொண்டிருக் கும் மலாய் துண்டுகளை எடுத்து,  அழுத்தி, அதிகப்படி பாகை எடுத்துவிட்டு, கன்டென்ஸ்டு மில்க் கலவையில் சேர்க்கவும். பொடித்த  பிஸ்தாவால் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் குளிர  வைத்துப் பரிமாறவும்.   

Topics : பால்   தண்ணீர்   எலுமிச்சை   கம்பி  

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.