Social Icons

Pages

Thursday, October 10, 2013

வெஜிடேபிள் சமோசா


தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு.... உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாவிற்கு.... மைதா - 2 கப் எண்ணெய் - 3 கப் உப்பு - 1 சிட்டிகை தண்ணீர் - 2 கப்
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பன்னீர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மற்றும் பச்சை பட்டாணி போட்டு, நன்கு அனைத்தையும் ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, அதில் அந்த உருண்டையை வைத்து அரைவட்டமாக தேய்த்து, பின் அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அந்த சமோசாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி!!!
இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.