வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய்
சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை
தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.
இத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை 2 விசில் வரை வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசம் ரெடி.
No comments:
Post a Comment