- வெங்காயம், பூடு இரண்டையும் தோலுரித்து, பொடியாக நறுக்கவும்.
- பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- காலையில்
புழுங்கலரிசியை களைந்து, அத்துடன் ஊற வைத்த வெந்தயம், பாசிப்பயறு,
நறுக்கிய வெங்காயம், பூடு, எல்லாவற்றையும் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி,
குக்கரில் 4-5 விசில் வர விடவும்.
- விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து, குழைவாக வெந்திருக்கும் கஞ்சியை, நன்றாக மசிக்கவும்.
- ஆறியதும், உப்பும் மோரும் கலந்து, பருகக் கொடுக்கவும்.
Note:
தொடர்ந்த வயிற்று வலி, அல்சர் இருப்பவர்களுக்கு, இந்தக்
கஞ்சி மிகச் சிறப்பான உணவாகும். காலையில் டிஃபனுக்கு பதிலாக, இந்தக்
கஞ்சியைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால்,
வயிற்று வலி, புண் குணமாகும்.
No comments:
Post a Comment