Social Icons

Pages

Friday, October 11, 2013

மீன் கட்லெட்


 தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய இஞ்சி&பூண்டு - 1 கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
முட்டை - 1
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 3/4 கப்
கறிவேப்பிலை - 2
உருளை கிழங்கு வேக வைத்து மசித்தது - 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1/4 கப் பொடியாக நறுக்கியது
எண்ணை பொரிக்க - 1/2 கப் 

செய்முறை:
செய்முறை மீன் துண்டுகளில் மஞ்சள், மிள்காய்த் தூள், உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணை 2 கரண்டி காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும். பிறகு பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.

கொத்தமல்லி இலை சேர்த்து, மசித்த உருளைக் கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் வடை போல் தட்ட வேண்டும். முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்க வேண்டும். பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்க வேண்டும்.
இப்படி எல்லா வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும். பின் எண்ணை 1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாற வேண்டும்.

No comments:

Post a Comment

 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.