Friday, October 11, 2013
காய்கறி புலாவ்...!
என்னென்ன தேவை?
வேகவைத்த சாதம்- 2 கப்
கேரட்-1
பீன்ஸ்- 10 முதல் 12
மிளகு- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3 அல்லது 4
பெரிய வெங்காயம்-1
இலவங்கப்பட்டை 1 துண்டு
பசுமை ஏலக்காய்- பொடி செய்தது 3 அல்லது 4
கிராம்பு-4
சீரகம்- -1 தேக்கரண்டி
பூண்டு - 1தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
நெய்(அ) எண்ணெய்-2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு சிறிய கொத்து
எப்படி செய்வது?
கேரட், மிளகாய், பீன்ஸ், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கிகொள்ளலாம். சமைத்து வைத்த சாததை ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பழுப்பு நிறத்தில் வருவதற்கு முன்பு இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெங்காயம் பழுப்பு நிறத்தில் வரும் வரை வதக்கவும். சில நொடிகள் கழித்து துண்டாக வெட்டப்பட்ட பூண்டையும் அதனுடன் சேர்க்கவும்.. ஒரு நிமிடம் கழித்து துண்டாக்கப்பட்ட காய்கறிகள்,
பச்சை மிளகாயை போட்டு உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் காய்கறிகளை மூடிவைத்து வேகவிடவேண்டும். காய்கறிகள் வெந்ததும் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி அழகுபடுத்தவும். காய்கறி புலாவ் ரெடி.
இஞ்சி புலாவ்!
என்னென்ன தேவை?
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
துருவிய இஞ்சி - 1 கப்,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்த பின் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டுத் தாளிக்கவும். அதில் துருவிய இஞ்சியைப் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
அதில் உதிரியாக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சோயா சங்க்ஸ் பிரியாணி
தேவையானவை:
புழுங்கலரிசி, பச்சரிசி - தலா அரை கிலோ, கடலைப்பருப்பு, மைதா மாவு - தலா
50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் - ஒன்று,
ஏலக்காய் - 5, வெல்லம் - 500 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
ரீஃபைண்ட் ஆயில், தூள் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்று
சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் கிரைண்டரில் அரைக்கவும். மாவு
ஓரளவுக்கு மசிந்த பின்னர்... துருவிய தேங்காய், ஏலக்காய், பொடித்த வெல்லம்
ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். 5 நிமிடத்துக்குப் பிறகு, மாவை
வழித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். அதில் சமையல் சோடா, மைதா மாவு
மற்றும் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அரை மணி நேரம் அப்படியே
வைக்கவும். பின்னர், அடுப்பில் கடாயை வைத்து, பாதி அளவுக்கு ரீஃபைண்ட்
ஆயில் ஊற்றி சூடாக்கி, ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றினால் வெந்து நன்றாக
ஊதி, உப்பி மெதுவாக மேலே எழுந்து வரும். அதனை திருப்பி விடவும். இவ்வாறு
ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும்.
திருநெல்வேலி, காரைக்குடி ஸ்பெஷலான இந்த இனிப்பை 4 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
சால்ட் அண்ட் பெப்பர் மஷ்ரூம்
என்னென்ன தேவை?
ஃப்ரெஷ்ஷான மஷ்ரூம் - 250 கிராம்,
கார்ன்ஃப்ளார் - மைதா - தலா 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது,
பொடித்த இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய செலரி தழைகள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
சிவப்பு மிளகாய் விழுது (சிவப்பு மிளகாயை வேக வைத்து, அரைத்தது) - சிறிது,
சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் - சிறிது,
சில்லி ஃப்ளேக்ஸ் (தேவைப்பட்டால்) - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
வெங்காயத் தாள் - சிறிது.
எப்படிச் செய்வது?
காளானை கழுவி, இரண்டிரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணெயில் பொரித்துத் தனியே வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்துப் பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.
பிறகு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். குறைந்த தணலில் வைத்து, சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
தேவையான உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள காளான் சேர்த்துக் கிளறி, தேவைப் பட்டால் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, கடைசியாக வெங்காயத் தாள் தூவிப் பரிமாறவும்.
மல்லி, புதினா, வெஜிடபிள் சாதம்!
தேவையானவை:
பாஸ்மதி அரிசி/பச்சரிசி..1/2 கிலோ
பெல்லாரி..............................2
காரட்.....................................2
முட்டைகோஸ்..................100 கிராம்
பீன்ஸ் .................................100 கிராம்
மல்லி தழை......................100 கிராம்
புதினா................................50 கிராம்.
பூண்டு, ..............................5
இஞ்சி ...............................சின்ன துண்டு
பட்டை, ............................மிகக் கொஞ்சமாக
கிராம்பு............................ 2
மிளகுப் பொடி..................3 தேக்கரண்டி
எண்ணெய்........................100 மில்லி
உப்பு ..................................போதுமான அளவு.
செய்முறை:
அரிசியை கல் நீக்கி கழுவி, கொஞ்சம் உப்பு போட்டு, அரிசிக்கு இரு
மடங்கு நீர் உற்றி, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். உடனே,
திறந்து சாதம் ஒட்டாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். காரட்,
முட்டைகோஸ், பீன்ஸை கொஞ்சம் பெரிதாகவே நறுக்கவும். வெங்காயத்தையும்
நீளவாக்கில் பெரிதாக நறுக்கவும். மல்லி+புதினாவை வெறுமனே அரைத்துக்
கொள்ளவும். இஞ்சி பூண்டையும் தட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை கிராம்பு
போட்டு சிவந்ததும் அதிலே வெங்காயம்+உப்பு கொஞ்சம் போட்டு நன்கு
சிவந்ததும், நறுக்கிய காய்கறிகள்+தட்டிய இஞ்சி பூண்டு போட்டு கொஞ்ச நேரம்
வதக்கவும். பின்னர் லேசான தீயில் இதனை எடுத்து குக்கரில் இருக்கும்
சாதத்தில் போட்டு அதிலேயே அரைத்த மல்லி புதினா + மிளகுப் பொடியைப் போட்டு
நன்கு கிளறி விடவும் பிறகு இறக்கி சாப்பிடவு
மீன் கட்லெட்
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய இஞ்சி&பூண்டு - 1 கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
முட்டை - 1
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 3/4 கப்
கறிவேப்பிலை - 2
உருளை கிழங்கு வேக வைத்து மசித்தது - 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1/4 கப் பொடியாக நறுக்கியது
எண்ணை பொரிக்க - 1/2 கப்
செய்முறை:
செய்முறை மீன் துண்டுகளில்
மஞ்சள், மிள்காய்த் தூள், உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு
பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணை 2 கரண்டி காயவைத்து அதில் வெங்காயம்,
பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி மற்றும்
பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும். பிறகு
பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும்
வதக்க வேண்டும்.
கொத்தமல்லி இலை சேர்த்து, மசித்த உருளைக் கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் வடை போல் தட்ட வேண்டும். முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்க வேண்டும். பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்க வேண்டும்.

இப்படி எல்லா வடைகளையும்
பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு
நன்கு ஒட்டியிருக்கும். பின் எண்ணை 1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில்
ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக
பொரித்து எடுத்து பரிமாற வேண்டும்.
இறால் வடை
தேவையான பொருட்கள்:
இறால் - ஒரு கப்
பொட்டுக்கடலை - கால் கப்
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை
பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல்
சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறாலையும் நன்கு
அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய் விழுதுடன் அரைத்த இறால், மிளகாய்த் தூள், சோம்பு தூள்,
மஞ்சள் தூள், உப்பு, நறுக்கின வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ள
வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி
கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட வேண்டும். இரு பக்கமும் வெந்ததும்
எண்ணெயை வடித்து விட்டு எடுக்க வேண்டும். இப்போது வடை தயார்.
புதினா, மல்லி, சிக்கன் கிரேவி
தேவையானவை:
chicken gravy 380சிக்கன்.1 /2 கிலோ
சின்ன வெங்காயம்...100 கிராம்
இஞ்சி...............1 இன்ச் நீளம்
பூண்டு................15 பல்
மிளகாய் பொடி ...1 தேக்கரண்டி
மல்லி பொடி.......1 தேக்கரண்டி
சீரகப்பொடி.........1 தேக்கரண்டி
மிளகுப் பொடி......2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி.........கொஞ்சம்
பச்சை மிளகாய்......3
புதினா தழை .....கைப்பிடி அளவு
மல்லி தழை .........கைப்பிடி
கறிவேப்பிலை....2 கொத்து
தயிர்................2 தேக்கரண்டி
எலுமிச்சை.....1 /2 மூடி
எண்ணெய்......4 தேக்கரண்டி
உப்பு..தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவவும். இஞ்சி, பூண்டை
நைசாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், புதினா,
மல்லி, கறிவேப்பிலையை நன்றாக அரைக்கவும்.
ஓர் அகன்ற பாத்திரத்தில், சிக்கன்,
இஞ்சி,பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலை,
மிளகாய், மல்லி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மிளகு பொடி, தயிர், எலுமிச்சை
சாறு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், உப்பு போட்டு பிசைந்து, குளிர் பதனப்
பெட்டியில், குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால்
சிக்கன் அட்டகாசமாய் இருக்கும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய்
ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதில் ஊறவைத்த
சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் போட்டு 5 நிமிடம் ஆனதும், தீயை சிம்மில்
வைத்து விடவும். 10 நிமிடத்தில் சிக்கன் பஞ்சு மாதிரி வெந்து விடும்.
இறக்கி விடலாம்.கோழிக் கறி என்பதால், இதில் எண்ணெய் மிதக்கும். அதாங்க,
அதன் கொழுப்பு..!
இந்த புதினா மல்லி சிக்கனை எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். இட்லி, தோசை சப்பாத்திக்கு நல்ல துணை..!
டூயட் ஆஃப் மேங்கோ ரசமலாய்
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்,
கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 2,
சர்க்கரை - 100 கிராம்,
மாம்பழ விழுது - 100 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
பொடித்த பிஸ்தா - சிறிது.
எப்படிச் செய்வது?
பால் கொதிக்கும் போது, எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும். பால் திரிவதை மஸ்லின் துணியில் கட்டி வைத்தால், தண்ணீர் வடியும். உள்ளே உள்ள பனீரை கைகளால் நன்கு மசித்து, மிருதுவாக்கி, இதய வடிவத் துண்டுகளாக வெட்டி வைக்கவும். மாம்பழத்தை தோல் நீக்கி,
கூழாக அரைத்து வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் விட்டு, ஒரு கம்பிப் பதத்துக்கு பாகு வைக்கவும். அந்தப் பாகில் சிறிதளவை எடுத்து ஆற வைக்கவும். சர்க்கரைப்பாகு ஓரளவு கொதிக்கும் போதே, அதில் தயாராக உள்ள இதய வடி வத் துண்டுகளைச் சேர்க்கவும்.
அவை மேலே மிதந்து வரும் போது எடுத்து, ஆற வைத்துள்ள பாகில் போடவும். கன்டென்ஸ்டு மில்க்கில் ஏலக்காய் தூளும், தேவை யானால் சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
மாம்பழக்கூழ் சேர்த்து இறக்கவும். சர்க்கரைப்பாகில் ஊறிக் கொண்டிருக் கும் மலாய் துண்டுகளை எடுத்து, அழுத்தி, அதிகப்படி பாகை எடுத்துவிட்டு, கன்டென்ஸ்டு மில்க் கலவையில் சேர்க்கவும். பொடித்த பிஸ்தாவால் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.
Topics : பால் தண்ணீர் எலுமிச்சை கம்பி
Thursday, October 10, 2013
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
S

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .
நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

Subscribe to:
Comments (Atom)