Social Icons

Pages

Featured Posts

Friday, March 11, 2016

கோழி ரசம்


தேதி : புதன், 09/03/2016 - 01:44
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்கள்

  • எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ
  • நல்லெண்ணெய் -5 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 2
  • மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  • பூண்டு - 10 பல்
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • வறுத்து பொடிக்க
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • சோம்பு - 1/4 டீஸ்பூன்
  • தனியா - 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 
  •  
    வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.
    இத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
    ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை 2 விசில் வரை வேக வைக்கவும்.
    சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
    கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசம் ரெடி.
  •  
  •  

Wednesday, January 28, 2015

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா!

ஆரோக்கியமான இயற்கை உணவுகளே வாழ்நாள் முழுவதும் நமது உடல்நலத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில் நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.
பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவாக சோயா மட்டுமே உள்ளது.
பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.
ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்யும்
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது.
உடல் எடை கட்டுப்பாடு
உடல் எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை, குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
இதயத்திற்கு நல்லது
இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து சேருவதே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.

Friday, October 11, 2013

நெய் சாதம்..!


என்னென்ன தேவை?

வடித்த உதிரி சாதம் - 1 கப்,
மிளகு - 1 டீஸ்பூன்,
நெய் - 4 டீஸ்பூன்,
கிராம்பு - 1,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

உதிரி சாதத்தில் உப்பு சேர்த்துக் கிளறவும். மிளகு, கிராம்பை சிறிது நெய்யில் வறுத்து பொடித்து சாதத்தில் கலக்கவும். மீதி நெய்யை சாதத்தில்  ஊற்றிக் கலந்து பரிமாறவும்.

காய்கறி புலாவ்...!


என்னென்ன தேவை?

வேகவைத்த சாதம்- 2 கப்
கேரட்-1
பீன்ஸ்- 10 முதல் 12
மிளகு- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3 அல்லது 4
பெரிய வெங்காயம்-1
இலவங்கப்பட்டை 1 துண்டு
பசுமை ஏலக்காய்- பொடி செய்தது 3 அல்லது 4
கிராம்பு-4
சீரகம்- -1 தேக்கரண்டி
பூண்டு - 1தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
நெய்(அ) எண்ணெய்-2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு சிறிய கொத்து

எப்படி செய்வது?

கேரட், மிளகாய், பீன்ஸ், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கிகொள்ளலாம். சமைத்து  வைத்த சாததை ஒரு கப்பில்  எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு  வதக்கவும்.
வெங்காயம் பழுப்பு நிறத்தில் வருவதற்கு முன்பு இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெங்காயம் பழுப்பு நிறத்தில் வரும் வரை  வதக்கவும். சில நொடிகள் கழித்து துண்டாக வெட்டப்பட்ட பூண்டையும் அதனுடன் சேர்க்கவும்.. ஒரு நிமிடம் கழித்து துண்டாக்கப்பட்ட காய்கறிகள்,
பச்சை மிளகாயை போட்டு உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் காய்கறிகளை மூடிவைத்து வேகவிடவேண்டும். காய்கறிகள் வெந்ததும்  சாதத்தை  சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி அழகுபடுத்தவும். காய்கறி புலாவ் ரெடி.

இஞ்சி புலாவ்!


என்னென்ன தேவை?

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
துருவிய இஞ்சி - 1 கப்,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்த பின் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை  மிளகாய் போட்டுத்  தாளிக்கவும். அதில் துருவிய இஞ்சியைப் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை  அணைக்கவும்.
அதில் உதிரியாக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

தக்காளி பச்சடி


 என்னென்ன தேவை? 
 
தக்காளி - 150 கிராம், 
சர்க்கரை - 100 கிராம், 
முந்திரிப் பருப்பு - 50 கிராம், 
வாழைப்பழம் - 1 (பூவன் பழம்). 
 
எப்படிச் செய்வது?  
 
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வதக்கவும். வதங்கியவுடன் சர்க்கரை போட்டுக் கிளறவும். அதில் முந்திரி, நறுக்கிய வாழைப்பழம்  போட்டுப்பறிமாறவும்.

சோயா சங்க்ஸ் பிரியாணி


தேவையானவை: புழுங்கலரிசி, பச்சரிசி - தலா அரை கிலோ, கடலைப்பருப்பு, மைதா மாவு - தலா 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 5, வெல்லம் - 500 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, ரீஃபைண்ட் ஆயில், தூள் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் கிரைண்டரில் அரைக்கவும். மாவு ஓரளவுக்கு மசிந்த பின்னர்... துருவிய தேங்காய், ஏலக்காய், பொடித்த வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். 5 நிமிடத்துக்குப் பிறகு, மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். அதில் சமையல் சோடா, மைதா மாவு மற்றும் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர், அடுப்பில் கடாயை வைத்து, பாதி அளவுக்கு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி சூடாக்கி,  ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றினால் வெந்து நன்றாக ஊதி, உப்பி மெதுவாக மேலே எழுந்து வரும். அதனை திருப்பி விடவும். இவ்வாறு ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும்.
திருநெல்வேலி, காரைக்குடி ஸ்பெஷலான இந்த இனிப்பை 4 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 

உங்கள் விளம்பரங்கள்

some_text

Sample text

பொன்மொழிகள்

ழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கு
ம்.